குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கூடுதலாக மின்விளக்குகள் எரிவதற்கு உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு, உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

268

குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கூடுதலாக மின்விளக்குகள் எரிவதற்கு உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு, உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சுற்றுலா தலமான குமரி கடலில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக, தினமும் படகு போக்குவரத்தும் நடைபெற்றுவருகிறது. இரவு நேரத்தில் முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசிப்பதற்காக, சிலையின் பாத பகுதியில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின்விளக்குகள் மாலை 7மணிக்கு அணைக்கப்படுகிறது. இதனால், அந்த நேரத்தில் திருவள்ளுவர் சிலையை கண்டு ரசிக்கமுடியாமல்க ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலாபயணிகள், மின் விளக்குகள் எரிவதற்கான நேரத்தை நீட்டித்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்று, திருவள்ளுவர் சிலைக்கு இரவு 9 மணிவரை மின்வசதியை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து, உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.