ஆட்சியை தக்க வைக்கும் நடவடிக்கையாக கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்..!

114

ஆட்சியை தக்க வைக்கும் நடவடிக்கையாக கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அமைச்சரவையில் இடம்பெறாதவர்களை பாஜக இழுக்க தீவிர முயற்சி செய்து வரும் நிலையில், கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்படி அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் கமட்டள்ளி ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருவரும் பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர். தற்போது கர்நாடகா அமைச்சரவையில் 34 பேர் இடம்பெற்றுள்ளனர். அதில் காங்கிரஸ் கட்சிக்கு 22 இடங்களும், ஜனதா தளம் கட்சிக்கு 12 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.