கர்நாடக முதல்வர் குமாரசாமி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை..!

154

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சட்ட நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

காவிரி நிதிநீர் பங்கீடு தொடர்பாக 9 பேர் கொண்ட மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்து உத்தரவிட்டது. இதில், மத்திய மற்றும் மூன்று மாநில உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே, கர்நாடக நீர்வள செயலாளர் காவிரி ஆணையத்தின் பகுதி நேர உறுப்பினராக செயல்படுவார் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பெங்களூருவில் இன்று சட்ட நிபுணர்களுடன் விவாதிக்க குமாரசாமி முடிவு செய்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார், முக்கிய கட்சி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.