கர்நாடகாவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது – குமாரசாமி

316

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குமாரசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று, காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கான அறிவிப்பை, ஜூன் 1ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்தது. தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தங்கள் தரப்பு உறுப்பினர்களை நியமித்த நிலையில், கர்நாடகா அரசு மட்டும் காலம் தாழ்த்தி வந்தது. இதனால் கர்நாடக பிரதிநிதியை தன்னிச்சையாக நியமித்த மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, காவிரி ஆணைய விதிகளின்படி, காவிரி படுகையில் உள்ள 3 நீர்ஆதாரங்களின் கட்டுப்பாட்டு உரிமையை கர்நாடகா இழக்க வேண்டி இருக்கலாம் என்றார். காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்ட குமாரசாமி, காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் கர்நாடகா சட்ட ரீதியாக போராட்டம் நடத்தும் எனக் கூறினார்.