சட்ட ரீதியாக பிரச்சினை வந்தால் எதிர்கொள்ளத் தயார் – முதல்வர் குமாரசாமி

247

கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான நீரை திறக்க காவிரி ஆணையத்தின் முடிவுக்காக காத்திருக்க முடியாது என்று அம்மாநில முதல்வர் குமாரசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கர்நாடக விவசாயிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாக கூறினார். எனவே, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த குமாரசாமி, சட்ட ரீதியாக பிரச்சினை வந்தால் அதை சந்திக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டார். தீர்ப்பாயம் கூறிய படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீர் வழங்குவதை அமல்படுத்தி இருப்பதாகவும் குமாரசாமி தெரிவித்தார்.