கருணைக் கோரும் மனு மீதான உத்தரவு வரும் வரை குல்பூ‌ஷண் ஜாதவை தூக்கில் போட மாட்டோம் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

349

கருணைக் கோரும் மனு மீதான உத்தரவு வரும் வரை குல்பூ‌ஷண் ஜாதவை தூக்கில் போட மாட்டோம் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷண் ஜாதவுக்கு அந்நாட்டு நீதின்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், அவர் குல்பூ‌ஷண் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த வழக்கில்,இறுதி முடிவு எடுக்கும் வரை, அவர் மீதான மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது எனவும் சர்வதேச நீதிமன்றம் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது. இந்தநிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி மற்றும் குடியரசுத் தலைவரிடமும் கருணை கோரும் மனு மீதான உத்தரவு வரும்வரை குல்பூ‌ஷண் ஜாதவை தூக்கில் போட மாட்டோம் என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.