குடும்ப அட்டைகளில் அடுத்த ஆறு மாதத்திற்கு தேவையான உள் தாள்கள் ஒட்டப்படும் என்று உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

259

குடும்ப அட்டைகளில் அடுத்த ஆறு மாதத்திற்கு தேவையான உள் தாள்கள் ஒட்டப்படும் என்று உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 2 கோடியே 55 ஆயிரத்து 709 குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. சுமார் 7 கோடிக்கு மேற்பட்ட பயனாளிகள் இதன்மூலம் குறைந்த விலையில் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டைகளுடன், மொபைல் மூலமாக ஆதார் எண் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், குடும்ப அட்டைகளில் அடுத்த ஆறு மாதத்திற்கு தேவையான உள் தாள்கள் ஒட்டப்படும் என்று உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. ஆதார் எண் இணைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளதால் இன்னும் 6 மாதங்களில் ஸ்மார்ட் கார்டுகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.