தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து வாக்குப்பெட்டிகள் விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டன !

224

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து வாக்குப்பெட்டிகள் விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.
இன்று நாடு முழுவதும் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சட்டப்பேரவை செயலாளர் பூபதி தலைமையில் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனிடையே சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் 232 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாக தெரிவித்தார்.
இதேபோல், புதுச்சேரியில் நடைபெற்ற வாக்குப்பதிவில், புதுவை எம்.எல்.ஏக்கள் 30 பேர் வாக்களித்துள்ளனர். மாலை 5 மணிக்கு பின்னர் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணிக்கு தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில், வாக்குப்பெட்டி விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.