கூடங்குளம் இரண்டாவது அணுஉலையில் வால்வு பழுது காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

285

கூடங்குளம் இரண்டாவது அணுஉலையில் வால்வு பழுது காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், கூடங்குளம் இரண்டாவது அணுஉலையில் கடந்த ஜூன் மாதம் 26 ந்தேதி வால்வு பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்பு மே 28 ஆம் தேதி பழுது சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி மீண்டும் துவங்கப்பட்டது.
அதிலிருந்து இன்று வரை 36 நாட்கள் தொடர்ந்து 1000 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், வால்வு பழுது காரணமாக தற்போது மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பழுது சரி செய்யப்பட்டு இரண்டு அல்லது மூன்று தினங்களில் மீண்டும் மின்னுற்பத்தி துவங்கும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, முதலாவது அணுஉலை கடந்த ஏப்ரல் 13 ந்தேதி எரிபொருள் நிரப்பும் பணிக்காக நிறுத்தப்பட்டு, இன்று வரை மின் உற்பத்தி செய்யப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.