கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி 730 மெகாவாட்டை எட்டியுள்ள நிலையில், நிறுத்தப்பட்டுள்ளது.

291

கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி 730 மெகாவாட்டை எட்டியுள்ள நிலையில், நிறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில ரஷ்ய நாட்டு உதவியுடன் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்தாண்டு ஜுன் மாதம் முதல் அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு மீண்டும் கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இரண்டாவது அணுஉலையில் 500 மெகாவாட்டிலிருந்து 750 மெகாவாட்டாக மின்உற்பத்தி அதிகரிக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இரண்டாவது அணு உலை 730 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டிய நிலையில், ஆய்வு பணிக்காக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஒருவார ஆய்வுப் பணிக்கு பின் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்று கூடங்குளம் வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.