கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்

252

கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சவுந்தரராஜன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அணு உலைக் கழிவுகளை சேகரித்து வைக்க போதிய வசதி இல்லை என்பதால், கூடங்குளம் அணு உலையை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என அவர்கள் தங்களது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, மனுதாரரின் குற்றச்சாட்டில் போதிய முகாந்திரம் இல்லை என்பதால் கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிட முடியாது என்று மறுப்பு தெரிவித்தது. மேலும், அணு உலைக் கழிவுகளை சேமிப்பதற்கான பணிகளை மேற்கொள்ள 2022 ஆம் ஆண்டுவரை மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கியும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.