கூடங்குளம் 3 மற்றும் 4வது அணுஉலைகளுக்கான கட்டுமானப் பணிகளை பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் கூட்டாக தொடங்கி வைத்தனர்.

243

கூடங்குளம் 3 மற்றும் 4வது அணுஉலைகளுக்கான கட்டுமானப் பணிகளை பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் கூட்டாக தொடங்கி வைத்தனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யா நாட்டு உதவியுடன் ஆறு அணுஉலைகள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு அணுஉலைகள் நிறுவப்பட்டு ஏற்கனவே மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. இந்நிலையில், 3 மற்றும் 4வது அணுஉலைகளுக்கான கட்டுமானப் பணிகளை பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமின் புதிர் கூட்டாக தொடங்கி வைத்தனர். கோவாவில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள இருவரும் கூட்டாக இணைந்து இதனை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.
பிரதமர் மோடி மற்றும் புதின் முன்னிலையில் கூடங்குளத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள 5 மற்றும் 6வது அணுஉலைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் போர் தளவாடங்கள், பொருளாதாரம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், ஸ்மார்ட் சிட்டி மற்றும் எரிசக்தி உள்ளிட்ட 16 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.