கூடங்குளம் அணு மின்நிலையத்தின் இரண்டாவது அணு உலை டிசம்பர் முதல் வர்த்தகப் பயன்பாட்டுக்காக மின் உற்பத்தி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

274

கூடங்குளம் அணு மின்நிலையத்தின் இரண்டாவது அணு உலை டிசம்பர் முதல் வர்த்தகப் பயன்பாட்டுக்காக மின் உற்பத்தி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணு உலை கடந்த 2014 டிசம்பரில் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. ரஷிய நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டுள்ள இந்த அணுமின் நிலையத்தில் எரிபொருளாக செறிவூட்டப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது. இதனையடுத்து இரண்டாவது அணு உலையில் டிசம்பர் முதல் வர்த்தகப் பயன்பாட்டுக்காக மின் உற்பத்தி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு எரிபொருள் நிரப்பப்பட்டு, பாதுகாப்பு சோதனைகள் மற்றும் அணு உலை இயக்கி பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை தென்மாநில மின்தொகுப்புடன் சேர்ப்பதற்கான பணி ஆகஸ்ட் 29-ஆம் தேதி முடிவடைந்தது. 3 மற்றும் 4-ஆவது அணு உலைகள் வரும் 2023ஆம் ஆண்டுக்குள் மின் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.