கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் மின்உற்பத்தி தொடக்கம்………….. மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டதாக தகவல்

277

கூடன்குளம் இரண்டாவது அணு உலையில் உற்பத்தியான மின்சாரம் மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் ரஷ்ய அரசு உதவியுடன் கூடன்குளம் அணு மின் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது அணு உலையில், கடந்த 2013ம் ஆண்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இதனையடுத்து 2வது அணு உலையில் மின் உற்பத்திக்கான அணுக்கரு பிளவு தொடர் வினை சோதனை கடந்த ஜுலை 10ம் தேதி நடத்தப்பட்டது. பின்னர் மே 18ம் தேதி யூரேனியம் அணு உலையில் நிரப்பப்பட்டது. அதன்பின்னர் 60 மெகா வாட் மின்சாரம் இரண்டாவது அணு உலையில் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது அணு உலையில் உற்பத்தியான மின்சாரம் மத்திய மின் தொகுப்பில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டது.