கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் அவசர கால பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது!

418

கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் அவசர கால பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் உள்ளன. இதில் முதல் அணுஉலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அங்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அவசர கால பேரிடர் பயிற்சி நடத்த இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் பரமேஸ்வபுரம் கிராமத்தில் பேரிடர் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதனையொட்டி, கிராம மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பேரிடர் குறித்த ஒத்திகையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ice_screenshot_20171027-161140