பந்தல்கண்ட் அருகே ஒரு குடம் தண்ணீரருக்காக பல கிலோ மீட்டர் தூரம் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

238

பந்தல்கண்ட் அருகே ஒரு குடம் தண்ணீரருக்காக பல கிலோ மீட்டர் தூரம் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உத்திர பிரதேசத்தில் சட்டார்ப்பூர் என்ற கிராமத்தில் கொடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவிவருகிறது. பல கிலோ மீட்டர் தூரம் வெயிலில் அலைந்து வறண்டு கிடக்கும் அருவி ஒன்றில் கசியும் நீரை எடுத்து தங்கள் தாகம் தீர்க்கும் நிலையில் உள்ளனர் இந்த மக்கள். ஒரு குடம் தண்ணீர் நிரம்ப வேண்டும் என்றால் 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும், இதனால் இப்பகுதியில் பாடம் நடத்தும் ஆசிரியர் முதல் ஒவ்வொருவராக கிராமத்தை விட்டு வெளியேறிவருகின்றனர். பல்வேறு கட்சிகள் மாறி மாறி ஆண்டும் கடந்த 100 ஆண்டுகளாக இந்த நிலைமை தான் எங்களுக்கு என்று புலம்புகின்றனர் இந்த மக்கள். இந்த மாநிலத்தின் முதல்வர் யோகிஆதித்யநாத் என்பது குறிப்பிடத்தக்கது.