தேனி அருகே நடைபெற்ற சனீஸ்வரபகவான் கோயில் ஆடித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

235

தேனி மாவட்டம், குச்சனூர் பகுதியில் சுயம்பு வடிவில் உள்ள சனீஸ்வர பகவான் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆடிமாதத்தையொட்டி ஆண்டுதோறும் ஆடி பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழாவின்போது, சனீஸ்வரபகவானுக்கு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டதுடன், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்திற்கும் பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக, சனீஸ்வரனின் வாகனத்தை குறிக்கும் விதத்தில், காக்கை உருவம் பதித்த கொடி ஏற்றபட்டு, விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, கோயிலில் உள்ள சுரபி நதியில் புனிதநீராடிய பக்தர்கள், உப்பு, எல்தீபம், காக்கை பொம்மை உள்ளிட்டவைகளை காணிக்கையிட்டு, நீண்ட வரிசையில் நின்று சனீஸ்வரபகவானை வழிபட்டனர். இதில், பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டதால், இவர்களின் நலன் கருதி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.