அமைச்சரின் பொய்த்தகவலுக்கே அரசை கலைக்கலாம் — கே.எஸ்.அழகிரி

174

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்று அமைச்சர் சொன்ன தவறான தகவலுக்கே, இந்த அரசாங்கத்தை கலைக்கலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லி புறப்பட்டு செல்லும் முன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தண்ணீர் பிரச்னை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், அமைச்சர் தண்ணீர் பஞ்சம் இல்லை என்ற பொய்யான தகவல் அளிக்கிறார் என்று கூறிய அழகிரி, இந்த ஒரு காரணத்துக்காகவே இந்த அரசாங்கத்தை கலைக்கலாம் என்றும் தெரிவித்தார். அதிமுகவின் லாப நோக்கினால்தான் ஏரி, குளங்கள் எதுவும் தூர் வாரப்படாமல் உள்ளன என்றும் பேட்டியின்போது கே.எஸ். அழகிரி குற்றம் சாட்டினார்.