கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து 39,000 கனஅடி நீர் திறப்பு..!

302

கே.ஆர். எஸ் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் காவிரியாற்றில் வினாடிக்கு 39,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

கர்நாடகாவில் பருவமழை நீடித்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கபினி அணை நிரம்ப ஒரு அடி மட்டுமே இருப்பதால், அணையில் இருந்து 35,000 கன அடி நீர் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. குடகு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் கே.ஆர்.எஸ் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அணையின் மொத்த கொள்ளவான 124 புள்ளி 8 அடியில் தற்போது 110 அடி நீர்மட்டம் உள்ளது. இந்த நிலையில், கனமழை தொடர்வதால் அணையில் இருந்து 4000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 39 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.