கே.ஆர்.பி அணை நீர்மட்டம் முழு கொள்ளவை எட்டியுள்ளதால் ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

321

கே.ஆர்.பி அணை நீர்மட்டம் முழு கொள்ளவை எட்டியுள்ளதால் ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 320 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனையடுத்து அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால், கெலவரப்பள்ளி, தொரப்பள்ளி, அக்ரஹாரம், மோரனப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று, கே.ஆர்.பி., அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணை முழுகொள்ளவை எட்டியுள்ளதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஓசூரில் தொடர்ந்து 3 நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிவதால், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் தீயணைப்பு வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.