ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

228

D பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் அணி, குரோஷியாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் எதிர்பாராத விதமாக ஸ்பெயின் அணி 1-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவிடம் தோற்றது. ஸ்பெயின் அணி 7-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. அந்த அணியின் வீரர் அல்வாரோ மோராடா கோல் அடித்தார். 45-வது நிமிடத்தில் குரோஷியா அணி பதிலுக்கு கோல் அடித்தது. அந்த அணியின் வீரர் நிகோலா காலினிச் கோல் அடித்தார். 79-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் செர்ஜியோ ரமோஸ் கோல் அடிக்க முயற்சி செய்தார். ஆனால் குரோஷியா கோல் கீப்பர் டேனியல் சுபாசிச் அதனை தடுத்தார். 89-வது நிமிடத்தில் குரோஷியா அணி வீரர் இவான் பெரிசிச் அடித்த கோல் அந்த அணிக்கு வெற்றி கோலாக மாறியது.