கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து விவசாயத்திற்காகவே நீர் திறக்கப்பட்டிருப்பதாக கர்நாடக முதலமைச்சர் பேசியிருப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறிய செயல் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து விவசாயத்திற்காக நீர் திறந்து விட்டிருப்பதாக கர்நாடகா முதலமைச்சர் கூறியதை சுட்டிக் காட்டிய பி.ஆர்.பாண்டியன், இந்த பேச்சு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.