கிருஷ்ணகிரியில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் இன்று திடீரென பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

276

கோடை வெயில் முடிந்த பிறகும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெயில் கொளுத்தி வந்தது. இதனால் மக்கள் பகலில் வெக்கையினாலும் இரவில் புழுக்கத்தாலும் கடும் அவதியடைந்தனர். இந்த நிலையில் இன்று மதியம் கருமேகம் சூழ்ந்த நிலையில் திடீரென மழை பெய்தது. மாலை வரை நீடித்த இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவிகிறது. முதல் போக சாகுபடி துவங்கும் நிலையில் இந்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.