கிருஷ்ணகிரி அருகே கோவிலில் பட்டாசு வெடித்ததில் இருவர் பலியான சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

320

கிருஷ்ணகிரி அருகே கோவிலில் பட்டாசு வெடித்ததில் இருவர் பலியான சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மோட்டூர் என்னும் இடத்தில் பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. அம்மாவாசை என்பதால் கோவிலில் சிறப்பு பூஜை செய்துள்ளனர். பூஜைக்காக ஊதுபத்தி கொளுத்தியபோது கோவிலின் உள்பகுதியில் அடுக்கி வைத்திருந்த பட்டாசுகளில் தீ பிடித்துள்ளது. இதனையடுத்து பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் கோவில் சுவர் இடிந்து பொதுமக்களின் மீது விழுந்தன. இந்த விபத்தில் மாரியப்பன் மற்றும் முனியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.