கிருஷ்ணகிரி மாவட்ட அணைகளும், கொடைக்கானல் ஏரியும் நிரம்பியதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

316

கிருஷ்ணகிரி மாவட்ட அணைகளும், கொடைக்கானல் ஏரியும் நிரம்பியதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி மற்றும் கெலவரபள்ளி அணைகள் நிரம்பி வழிகின்றன. அணைகளில் இருந்த வெளியேற்றப்படும் நீரால், மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டன.
பல இடங்களில் ஊருக்குள் தண்ணீர் புகுந்தால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியினர். இந்தநிலையில், சூளுகிரி, மேடுபள்ளி, ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், பயிரிடப்பட்ட தக்காளி, நெல், ராகி ஆகியவை நீரில் மூழ்கின.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கொடைக்கானல் ஏரி 16 ஆண்டுகளுக்கு பிறகு 35 அடியை எட்டியுள்ளது. இன்று இரவுக்குள் ஏரி நிரம்பி விடும் என்பதால், பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ice_screenshot_20170907-094021