பொங்கலை முன்னிட்டு ஆட்டுச்சந்தை களைகட்டியது..!

70

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி ஆட்டுச் சந்தையில் ஒரு ஜோடி ஆடுகள் 50 ஆயிரம் வரை விற்பனையானதால் வியாபாரிகள் உற்சாகமடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் நேற்று வாராந்திர ஆட்டுச் சந்தை நடந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. இவற்றை வாங்குவதற்கு வெளிமாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். பொங்கல் பண்டிகையின்போது ஆடுகள் பலியிடுவது வழக்கம் என்பதால் அதிகளவில் விற்பனையாயின.

ஒரு ஜோடி ஆடு குறைந்தபட்சம் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சம் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாயின. நேற்றுமட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் விற்பனையாகியிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.