தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானையை நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.

91

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே தமிழக கர்நாடக எல்லை பகுதியில், வனப்பகுதியை ஒட்டியுள்ளது உளி பெண்டா கிராமம். இரவு நேரங்களில் வனப்பகுதியிலிருந்து ஊருக்குள் வரும் யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்நிலையில்
விவசாயிகள் மாதேஷ் மற்றும் பசவராஜ் ஆகியோர் தாங்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால், அங்கு வந்த யானை கூட்டத்தை நோக்கி
சுட்டதில் ஒரு பெண் யானை குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்த தகவலறிந்த வனத்துறையினர் விவசாயி மாதேசை கைது செய்தனர். மற்றொரு விவசாயி பசவராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.