நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி…. மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்

133

கிருஷ்ணகிரியில் நிதிநிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டவரிடமிருந்து, பணத்தை மீட்டு தர கோரி, பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரியில் சினர்ஜி லைப் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்த செந்தில் குமார், தன்னுடைய நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு, இரட்டிப்பு வட்டி தருவதாக பொய் வாக்குறுதி கூறி, பொதுமக்களிடம்
கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் முதிர்வு காலம் முடிந்ததும் யாருக்கும் பணம் கொடுக்காமல் கால தாமதம் செய்து வந்துள்ளார். இதனையடுத்து, சந்தேகமடைந்த முதலிட்டாளர்கள் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டனர். ஆனால் மோசடியில் ஈடுபட்ட செந்தில்குமார் தலைமறைவாகி விட்டார். இதனால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று ,தங்களுடைய பணத்தை மீட்டு தரக் கோரி மனு அளித்தனர்.