தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தவுடன், ஆட்சி மாறும் – புகழேந்தி

442

18 எம்எல்ஏ-க்கள் வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் ஆட்சி மாறும், தினகரன் முதல்வர் ஆவார் என அவரது ஆதரவாளர் புகழேந்தி நம்பிக்கை தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறையில் சசிகலா நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக கூறினார். சசிகலா மீண்டும் வந்தபின், பல மாற்றங்கள் ஏற்படும் என்று கூறிய புகழேந்தி, தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் தினகரன் முதல்வர் ஆவார் என்று உறுதிபட தெரிவித்தார். விஜயகாந்த்தை முதுகில் குத்திவிட்டு வந்த நன்றி கெட்டவர் அமைச்சர் பாண்டியராஜன் என்றும் அவர் விமர்சித்தார். ஆசிரியர்களை இழிவுபடுத்தி பேசிய முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் புகழேந்தி வலியுறுத்தினார்.