எதிர்க்கட்சியினருக்கும் முன் மாதிரியாக அ.தி.மு.க உள்ளது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

140

எதிர்க்கட்சியினருக்கும் முன் உதாரணமாக அ.தி.மு.க திகழ்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க சார்பில் 90 ஜோடிகளுக்கு சீர்வரிசைகளுடன் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தினர்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பாலகிருஷ்ணா ரெட்டி, பாண்டியராஜன், நிலோபர் கபில், வளர்மதி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் எத்தனை கட்சிகள் இருந்தாலும், அ.தி.மு.கதான் மக்களுக்காக உழைக்கும் ஒரே கட்சி என்றார். செயல்படாத ஒரு தலைவருக்கு தமிழகத்தில் செயல் தலைவர் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.