இருசக்கர வாகனம் மீது மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து!

250

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில், அதில் பயணம் செய்த 2 பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அடுத்த காவாப்பட்டியைச் சேர்ந்த முனுசாமி மற்றும் சரவணன் ஆகியோர் தனியார் தொழிற்சாலையில் வேலை முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தனர். deathஅப்போது கோவில் அருகே இருந்த மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து இருசக்கர வாகனம் மீது விழுந்ததில், இரண்டு பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.