கிருஷ்ணா நதிநீர் பங்கீடு விவகாரம், நாளை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆந்திரா பயணம்.

120

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆந்திரா செல்கிறார்.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற, கடந்த 1983-ம் ஆண்டு கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி ஆந்திர அரசு தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை அளிக்க வேண்டும். இந்நிலையில் பருவமழை பொய்த்துப் போனதால், சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி ஆகிய ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதையடுத்து சென்னையில் குடிநீர் தட்டுப்போட்டை போக்க, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக ஆந்திர அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆந்திரா செல்கிறார். ஆந்திர தலைநகர் அமராவதி செல்லும் பன்னீர்செல்வம், நாளை பகல் 1 மணிக்கு கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின் படி ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 4 டிஎம்சி தண்ணீரை பெற்றுதர, அம்மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். நதிநீர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த, தமிழக முதலமைச்சர் ஒருவர் ஆந்திரா செல்வது இதுவே முதல் முறையாகும்.