தமிழக எல்லையை அடைந்த கிருஷ்ண நதிநீர் | 15 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதாக தகவல்

175

ஆந்திராவில் திறந்துவிடப்பட்ட கிருஷ்ண நதி நீர் தமிழக எல்லையை அடைந்ததால், சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பருவமழை பொய்த்து போனதால், சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி ஆகிய ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. எனவே ஏப்ரல் மாதம் வரை கண்டலேறு அணையில் இருந்து 4 டி.எம்.சி. நீரை திறந்துவிட வேண்டும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் நேரில் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, தமிழகத்திற்கு இரண்டரை டிஎம்சி தண்ணீர் வழங்க ஆந்திர அரசு ஒப்புதல் அளித்தது.

அதன்படி, கடந்த 9ம் தேதி கண்டலேறு அணையில் 1500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழகம் வந்த சேர்ந்தது. தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட்டில் 15 கன அடி நீர் வந்து கொண்டு இருப்பதாகவும், இது படிப்படியாக அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.