கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் 45 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

247

கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் 45 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை இரண்டாவது கூட்டத் தொடரின் எட்டாம் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. கேள்விநேரத்தில் புதிய கல்லூரிகள் தொடர்பாக திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரி கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அதிமுக ஆட்சி அமைத்து கடந்த ஆறு ஆண்டுகளில் 21 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 24 பல்கலை உறுப்புக் கல்லூரிகள் என மொத்தம் 45 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பல மாநிலங்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதிக் கேட்டிருந்த நிலையில், தமிழகத்தில் அமைக்க அனுமதிக் கிடைத்தது நமது முதல் வெற்றி எனக் குறிப்பிட்டார். அதற்கான இடத்தைத் தேர்வு செய்து கொடுக்குமாறு மத்திய அரசு கேட்ட பத்து நாட்களிலேயே, இடம் தேர்வு செய்து அனுப்பப்பட்டது. மத்திய அரசு கோரியுள்ள விவரங்கள் குறித்து 5 மாவட்ட ஆட்சியாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.