2010ம் ஆண்டு பொறியியல் படிப்பை முடித்து தேர்ச்சி பெறாமல் உள்ளவர்களுக்கு அடுத்த ஆண்டு தேர்வு நடத்தப்படும்- உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்!

344

2010ம் ஆண்டு பொறியியல் படிப்பை முடித்து தேர்ச்சி பெறாமல் உள்ளவர்களுக்கு அடுத்த ஆண்டு தேர்வு நடத்தப்படும் என்று, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தூய்மை சேவை நிகழ்ச்சியில் ஆளுநர் வித்யாசாகர் ராவ், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஆளுநர், தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பழகன்,
2010ம் ஆண்டு பி.இ படித்து பட்டம் பெற முடியாதவர்களுக்கு படிப்பை முடிக்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.