கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

152

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழரின் கலாச்சார அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் கனிமொழி மதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். இது கலாச்சாரத்தை பறைசாற்றுவதாக இருக்கும் என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழர்களின் கலாசாரத்தைப் பாதுகாப்பது அரசின் கடமை என்று தெரிவித்தனர்.