கோயம்பேடு வணிக வளாகத்தில் பொங்கல் விழா

115

கோயம்பேடு வணிக வளாகத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

கோயம்பேடு வணிக வளாகத்தில் கீரை வியாபாரிகள் சங்கம் மற்றும் மலர், காய், கனி வியாபரிகள் சங்கம் சார்பில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து 4-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவில், கோயம்பேடு வணிக வளாகத்தின், முதன்மை நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் பல்வேறு வியாபாரிகள் சங்கத் தலைவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், பெண்கள் புதுப்பானையில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். பறையிசை முழங்க நடன நிகழ்ச்சியும் நடைபெற்றன.