கோவில்பட்டி அருகே உள்ள பாப்பன் குளத்தின் கண்மாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுவதால், விவசாயிகள் வேதனை!

469

கோவில்பட்டி அருகே உள்ள பாப்பன் குளத்தின் கண்மாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுவதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பாப்பன்குளம் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கண்மாயை பலப்படுத்தக் கோரியும், மதகுகளை சரிசெய்ய கோரியும் பல முறை மனு அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே நேற்று கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக பாப்பன்குளத்தின் கரை உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயத்திற்கு நீரை தேக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.