தனியார் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர் வெட்டி படுகொலை!

570

கோவில்பட்டியில் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த காந்தாரி ஆம்புலன்ஸ் வாகனங்களை வாடகைக்கு விட்டு வருகிறார். இவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன் நின்றிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் காந்தாரியை சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பி ஓடினர். இதில் தலைத் துண்டிக்கப்பட்ட காந்தாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காந்தாரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தப்பி ஓடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.