நஞ்சுண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

227

எடப்பாடியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தேவகிரி அம்மன் பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமிக்கு பரிவட்டம் கட்டி, பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. இதன்பின் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், தங்கமணி உள்ளிட்ட திரளான பக்தர்களும் கலந்து கொண்டு வழிபட்டனர்.

முன்னதாக சேலம் வந்த போது, தலைவாசல் அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் ரோஹினி , மாவட்ட எஸ்.பி மற்றும் மாநில கூட்டுறவு வங்கி தலைவர் சின்னத்தம்பி, ஆத்தூர் எம்.எல்.ஏ சின்னத்தம்பி உள்ளிட்டோரும் முதலமைச்சரை வரவேற்றனர்.