கோவையில் டெங்கு காய்ச்சல் காரணமாக 48 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

257

கோவையில் டெங்கு காய்ச்சல் காரணமாக 48 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே, மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கோவையில் 48 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனை டீன் அசோகன் தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தநிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் உயிரழந்தனர். மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.