கோவை அருகே வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் மனமுடைந்த ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

277

கோவை அருகே வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் மனமுடைந்த ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், வாடகை பணத்தை கேட்டு வீட்டின் உரிமையாளர் பத்மாவதி மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், வீட்டின் மின்இணைப்பையும் அவர் துண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த லோகநாதன் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார். உயிரிழப்புக்கு காரணமான வீட்டின் உரிமையாளர் கைது செய்யக்கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.