நேரடியாக எந்த மிரட்டலும் இல்லை – ஐ.ஜி. ரூபா

504

ஆபத்து ஏற்படும் என பலர் எச்சரித்தும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் பரப்பன அக்ரஹார சிறையில் நடந்ததை வெளிப்படுத்தியதாக கர்நாடக மாநில ஊர்க்காவல்படை ஐ.ஜி. ரூபா தெரிவித்துள்ளார்.

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு இயக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பரப்பன அக்ரஹார சிறை விவகாரம் தொடர்பாக தனக்கு நேரடியாக எந்த மிரட்டலும் இல்லை என்று கூறினார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக விண்ணப்பம் கொடுத்தால் வேண்டுமென்றே தாமதபடுத்தப்படுத்தப்படுவதாகவும் பதில் சொல்வதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.