கோவை அருகே வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 150 சவரன் நகை மற்றும் 40 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

142

கோவை அருகே வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 150 சவரன் நகை மற்றும் 40 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் அருகே வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பஷீர், இவர் அதே பகுதியில் பஞ்சு வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி அவரது வீட்டில் புகுந்த 12 பேர் கொண்ட மர்ம கும்பல், பஷீர் வீட்டில் சோதனை செய்துள்ளது. இதையடுத்து முறையாக வருமான வரி செலுத்தவில்லை எனக்கூறி பஷீர் வீட்டில் இருந்த 150 சவரன் நகை, மற்றும் 40 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டதுடன், அவரையும் கைது செய்துள்ளனர். காவல்நிலையத்திற்கு அழைத்துச்செல்வது போல் அவரை கூட்டிச்சென்ற மர்ம நபர்கள், சின்னியம்பாளையம் பகுதியில் அவரை இறக்கி விட்டுள்ளனர். சந்தேகம் அடைந்த பஷீர் இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.