கோவையில் பட்டாசுக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

251

கோவையில் பட்டாசுக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கோவை காந்தி பூங்காவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் மேல்தளத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசுக்கிடங்கு அமைந்துள்ளது. இந்நிலையில், இன்று மாலை நான்கு மணியளவில் பட்டாசுக்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதில், கல்விமையத்தில் இருந்த பத்துக்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.