சர்வதேச பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை குறித்து பரிசீலனை..!

518

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், 3 மாதத்திற்குள் தமிழ் இருக்கைக்கான ஆய்வறிக்கை பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறிய அமைச்சர் மாபா. பாண்டியராஜன், அதற்கான முழுத்தொகையும் கடந்த மார்ச் மாதமே செலுத்தப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலாய், யாழ்ப்பாணம் உள்ளிட்ட சர்வதேச பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் கலந்தாலோசித்து வருவதாகவும் கூறினார்.