கோவையில், 98 வயது மூதாட்டி ஒருவர் யோகாசனங்களை செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

243

கோவையில், 98 வயது மூதாட்டி ஒருவர் யோகாசனங்களை செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
கோவை கணபதி பகுதியில் வசித்து வருபவர் நானம்மாள். 98 வயது நிரம்பிய அவர், தனது 5 வயதில் இருந்தே யோகாவை பயின்று வந்தார். பல நூறு மாணவர்களுக்கு அவர் யோகா பயிற்றுவித்து வருகிறார். இளைஞர்கள் யோகாவை கற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் இவர், ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வாழ யோகா வழிவகுக்கும் என்றும் கூறுகிறார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விழாவில் நானம்மாளுக்கு குடியரசு பிரணாப் முகர்ஜி விருது வழங்கி கவுரவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.