கோவையில் இன்று அரசு சார்பில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கோலாகல கொண்டாட்டம் !

388

கோவையில் இன்று அரசு சார்பில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துக்கொண்டு சுமார் ஆயிரத்து 328 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டயுள்ளார்.
தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மாவட்டவாரியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக இன்று கோவை வ.உ.சி. மைதானத்தில் சட்டபேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று 691 கோடி மதிப்பிலான பணி முடிந்த திட்டங்களை மக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கிறார். சுமார் ஆயிரத்து 328 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்ட உள்ளார். இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துக்கொள்கின்றனர். மேலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ice_screenshot_20171203-112109