கோவை மதுக்கரையில் மயக்க ஊசி போட்டு பிடித்துச் செல்லப்பட்ட காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.

315

கோவை மதுக்கரை பகுதியில் ஓராண்டுக்கும் மேலாக சுற்றித்திரிந்த மகராஜ் என்ற ஆண் காட்டு யானையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். காட்டு யானையின் தாக்குதலால் சில மாதங்களுக்கு முன்பு வன ஊழியர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து வனத்துறையினர் கும்கி யானைகள் மற்றும் மருத்துவர்களின உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பின்னர் அந்த யானை, டாப்சிலிப் வரகழியாறு பகுதியில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏற்கனவே தயார் செய்யப்பட்டு இருந்த மரக்கூண்டுக்குள் காட்டு யானை அடைக்கப்பட்டது.
இந்நிலையில் யானை மகராஜ் திடீரென உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கும்கியாக மாற்ற திட்டமிட்டிருந்த நிலையில், யானை மகாராஜ் உயிரிழந்தது வனத்துறையினர் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது