கோவை அரசு மருத்துவமனை மேம்பாட்டிற்காக 280 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

395

கோவை அரசு மருத்துவமனை மேம்பாட்டிற்காக 280 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோவையில் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் தடுப்பு குறித்து அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி, உடுமலை ராதகிருஷ்ணன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதன் பின் செய்தியளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், கோவை அரசு மருத்துவமனை மேம்பாட்டிற்காக 280 கோடி ரூபாயும், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு 58 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பருவமழை வர இருக்கும் நிலையில் விரைவு மருத்துவ குழு அமைக்கப்படும் என்று கூறிய அவர், டெங்கு காய்ச்சல் காரணமாக இறப்பு ஏற்பட கூடாது என்பதில் அரசு கவனத்துடன் செயல்படுகிறது என்று தெரிவித்தார்.